பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் கூகுள் நிறுவனம் வழங்கும் ஜிமெயில் வசதியை 
பயன்படுத்துகிறோம். முன்பு இதில் நாம் தவறுதலாக நம்முடைய காண்டக்ட் 
லிஸ்ட்டை ஒட்டுமொத்தமாக டெலீட் செய்து விட்டால் அவ்வளவு தான் அந்த 
காண்டக்ட் லிஸ்ட் திரும்ப பெற மிகவும் சிரமம் பட வேண்டி இருக்கும். சில 
முக்கிய முகவரிகளை அழித்து விட்டால் நமக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
இந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஜிமெயில் நிறுவனம் தற்போது புதிய 
வசதியை அறிமுக படுத்தி உள்ளது. அதாவது நம்முடைய மெயிலில் உள்ள காண்டக்ட் 
லிஸ்ட் ஓட்டு மொத்தமாக டெலீட் செய்தால் கூட அடுத்த வினாடியே அதை 
திரும்பவும் கொண்டு வந்து விடலாம். ஆனால் நீங்கள் டெலீட் செய்து 30 
நாட்களுக்குள் இருக்க வேண்டும்.
* உங்கள் ஜிமெயிலில் www.gmail.com அக்கௌன்ட்டில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்து Contact என்பதை க்ளிக் செய்யுங்கள்.
* படத்தில் காட்டியுள்ளதை போல Contacts என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
* அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் More Actions என்பதை க்ளிக் செய்யுங்கள்.
* அதில் குறிப்பிட்டு காட்டி இருக்கும் Restore contact என்பதை க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.
* இதில் உங்களுக்கு தேவையான கால இடைவெளியை தேர்வு செய்து Restore என்ற 
பட்டனை அழுத்துங்கள். முக்கியமானது இதில் அதிகபட்சமாக நீங்கள் 30 
நாட்களுக்குள் டெலீட் செய்து இருந்தால் மட்டுமே முகவரிகளை திரும்ப கொண்டு 
வரமுடியும் 
* நீங்கள் Restore பட்டனை அழுத்திய அடுத்த வினாடியே நீங்கள் தேர்வு செய்த 
கால இடைவெளிக்குள் அழித்த அனைத்து முகவரிகளும் வந்து விடும். 
* நீங்கள் வேண்டுமென்றே உங்கள் காண்டக்ட் லிஸ்ட் அழித்து திரும்பவும் கொண்டும் வரலாம் (என்ன காசா பணமா).
டுடே ஸ்பெஷல்: குரோம் நீட்சி 
நாம் சில நம் இணைய பக்கங்களை Screen shot
 எடுக்க சில மென்பொருளோ அல்லது நம்முடைய கீபோர்டில் உள்ள Screenshot 
வசதியின் மூலமோ நாம் பயன்படுத்துகிறோம். அந்த வரிசையில் மிகவும் எளிமையான 
மிகவும் பயனுள்ள குரோம் நீட்சியை கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. 
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த படத்தில் உள்ள அனைத்து வேலைகளையும் இந்த நீட்சியின் மூலம் சுலபமாக செய்யலாம்.
 




 
No comments:
Post a Comment