நீங்களும் கலெக்டர் ஆகலாம் மிக எளிதாக

IAS வெறும் கனவல்ல, நிஜமே!
இந்த ஆண்டிற்கான(2012) சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான தேதி அறிவிக்கபட்டு உள்ளது. வரும் மே மாதம் 20 ஆம் தேதி(20.05.2012)அன்று, முதல் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் IAS, IPSபோன்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள், இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசு பணிதேர்வாக கருதப்படும்.
இந்திய ஆட்சி பணி தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள் தான், இந்தியன் அட்மினிஸ்ரேட்டிவ் சர்வீஸ்(IAS), இந்தியன் போலீஸ் சர்வீஸ்(IPS), இந்தியன் பாரின் சர்வீஸ்(IFS), இந்தியன் ஆடிட் அண்ட் அக்கவுன்ட்ஸ் சர்வீஸ், இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கியமான 25 சிவில் சர்வீஸ் பணிகளில் சேர முடியும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு கட்டணம்:
சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். UPSC யின் http://upsconline.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

 
Blogger Widgets