இளநீரில் உள்ள சில மருத்துவ தன்மைகள்…

coconut tree
இளநீர் என்பது உடலியல் இயக்கங்களுக்கு தேவையான பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink). இது உடலுக்கு குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
இளநீர் பல்வேறு நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் உள்ளது. இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது..
காலையில் இளநீர் சாப்பிடுவது மிக மிக ஆரோக்கியமான பானமாகும். உடலுக்குச் சத்தும் தந்து ஊக்கமும் தரும் இனிய மருந்து இது. மதுபான அடிமைகள் இளநீருக்கு அடிமையானால் அவர்கள் ஆரோக்கியம் மிக்க மனிதராகத் திகழ்வார்கள்.
குழந்தைகள் இதை அருந்தினால் ஒடுங்கிப் போகாமல் ஓரளவு சதைப் பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள்.
பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும். கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியுமாம்..
அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்ப்பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால் கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் கரண்டி தூள் செய்து கலந்து பருகிவர ஐந்து நாட்களில் அவை நீங்கும்…
பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து.
பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.
உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும். கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண், ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்…….. 
அழகை பராமரிக்க உதவும் இளநீர்…..

No comments:

Post a Comment

 
Blogger Widgets