செர்ரி பழம் (Cherry Juice) – இரவு நேர தூக்கமின்மையை தடுக்கும் – ஆராய்ச்சி தகவல்

இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோயை விரட்ட செர்ரி பழ ஜூஸ் உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
benefits-of-cherry-juice
நியூயார்க்கிலுள்ள ரோசஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோய் ஏராளமானோருக்கு உண்டு. வயதானவர்களில் 4-ல் ஒருவருக்கு இந்த நோய் உண்டு. இந்த நோய் இன்சோம்னியா என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயை விரட்டுவதற்கு செர்ரி பழ ஜூஸ் போதும் என்கிறார் ரோசஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியரும், உளவியல் நிபுணருமான டாக்டர் வில்பிரட் பிஜியான்.

இந்த ஆய்வு இவர் தலைமையில்தான் நடந்தது. இதுகுறித்து வில்பிரட் கூறியதாவது:

இன்சோம்னியா நோயால் பாதிக்கப்படுபவர்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார். அப்படியே தூக்கம் வந்தாலும் விரைவில் எழுந்துவிடுவார்கள். வயதானவர்களில் 4-ல் ஒருவருக்கு இந்த நோய் கட்டாயம் இருக்கிறது.
அவர்களுக்கு செர்ரி பழ ஜூஸை ஒரு நாளைக்கு இரு முறை கொடுக்கும்போது அந்த நோய் குணமாகிவிடுகிறது. தொடர்ந்து இதைச் செய்யும்போது அவர்களுக்கு நல்ல தூக்கம் வருவது எங்கள் ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.
காலையிலும், மாலையிலும் இந்த ஜூஸை அவர்கள் குடிக்கவேண்டும். இதில் இனிப்பு சேர்க்கக்கூடாது. செர்ரி பழத்தில் உள்ள மெலடோனின் சத்து, உடலிலுள்ள ஹார்மோனை முறைப்படுத்தி தூக்கத்தை முறையாக உடலுக்கு வழங்குகிறது. பகலில் உழைப்பு, இரவில் தூக்கம் என்ற சுழற்சியை அந்த ஹார்மோன் ஏற்படுத்த ஜூஸ் உதவுகிறது.
நவீன காலத்தில் இன்சோம்னியா நோயை குணப்படுத்துவது என்பது மிகப் பெரிய சவாலாகும். அந்த சவாலை நிறைவேற்ற செர்ரி பழ ஜூஸ் உதவுகிறது.
இந்த ஆய்வை நாங்கள் 2 கட்டமாக மேற்கொண்டோம். முதல் கட்டத்தில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு காலை, மாலை இரு வேளையிலும் செர்ரி பழ ஜூஸை கொடுத்தோம். 2-வது கட்டத்தில் அதே நபர்களுக்கு வேறு பழ ஜூஸை கொடுத்து ஆய்வு செய்தோம். செர்ரி பழ ஜூஸ் குடிப்பவர்கள் சராசரியாக 17 நிமிடங்கள் அதிகம் தூங்குவது தெரியவந்தது என்றார் அவர்.
இந்த ஆய்வு குறித்து மெடிசனல் ஃபுட் என்கிற பத்திரிகையில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

 
Blogger Widgets