குழந்தைகள் அல்லாஹ்வின் அருட்கொடைகள்

அல்லாஹ்வின் அருட்படைப் புக்களான குழந்தைச் செல் வங்களைப் பெற்று விட்டால் மட்டும் போதாது. பேணி வளர்க்கவும் வேண்டும். பெற்றார் ‘எப்படியும் வளர்க் கலாம்’ என்ற நிலைப் பாட்டை மாற்றி, ‘இப்படித்தான் வளர்க்க வேண்டு’மென்ற ஒரு இலட்சியத்துடன், இறை திருப்தியை நோக்காகக் கொண்டு சமுதாய நலன் கருதி இஸ்லாமிய அடிப்படையில் வளர்க்க முயற்சிக்க வேண்டும்.
குழந்தை வளர்ப்பில் பாரிய பங்களிப்புச் செய்யும் பெற்றோர் அன்றாடம் அவர்கள் வாழ்க் கையில் கையாளும், உணவு, உடை, சுத்தம், இறைபக்தி, போன்றவைகளை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கமைய கடைப்பிடிக்கப் பழக்குவதோடு, நல் விழுமியங்களான அன்பு, பொறுமை, பணிவு, தியாகம், மன்னிக்கும் மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல், ஒழுக்கம், பண்பு, உண்மை உரைத்தல், பெரியோரையும் மற்றையோரை மதித்தல், மற்றவர் பொருளைப்பேணல், பெற்றார் சொற்படி நடத்தல் போன்ற விடயங்களை பரிணமிக்கச் செய்து சீரான வாழ்வை இஸ்லாம் கூறும் நெறிமுறை, வழிமுறைகளுக்கேற்ப, நேரான பாதையில் பயணிக்க வழி வகுத்துக் கொடுக்க வேண்டியது பெற்றாரின் தலையாய கடமை.
‘ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாமிய இயல்புடனே பிறக்கின்றது. அதன் பெற்றோர்தான் அதை யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ நெருப்பு வணங்கி யாகவோ, ஆக்குகின்றனர்’ அல்-ஹதீஸ்.
‘மேலும் நீங்கள் உங்கள் குழந்தை யுடன் நெருங்கி இருங்கள் அவர்களுக்கு மிகச் சிறந்த கல்வியைப் புகட்டுங்கள்’
அல்- ஹதீல்.
பெற்றோர் பெரும்பாலான தம் அன்றாட நடவடிக்கைகளின் போது பிள்ளைகள் மத்தியில் மிக அவதான மாகவும், எச்சரிக்கையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
பேசும் வார்த்தை களை எச்சந்தர்ப்பத்திலும், ஒழுக்க வரம்புகளை மீறாமல், நெறிமுறையோடு பிரயோகிக்க வேண்டும். குடும்பப்பிரச்சி னைகள், சண்டை சச்சரவுகளாலும், தவிர்க்க முடியாத குடும்பப் பிரச்சினை யானாலும் பிள்ளைப் பாதிக்காத முறை யில் சமரசமான தீர்வினைப் பெற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது.
சடுதியாக விட்டுவிட முடியாத போதைப் பாவனைப் பழக்கமென்றாலும் (சிகரட்) பிள்ளைகள் மத்தியில் எடுத்தாளாமல் இருப்பது குடும்ப ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், பிள்ளைகளின் நன்நடத்தைக்கும் வழி வகுக்கின்றது.
பெற்றோரின் பிரச்சினைகள் பிள்ளை களின் மனதைக் குழப்புவதுடன், அவர்களின் உள, உடல் வளர்ச்சிப் பாதிக்கப்படுவது மட்டுமின்றி சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து விடநேரிடும். இதனால் பெற்றோர்க்கிடையிலான நெருக்கம், உறவு குறைய தூரமாக பிள்ளைகள் தங்கள் அதிகமான நேரத்தை குடும்பத்திற்கு வெளியில் கழிக்கச் சாட்டுப் போக்குகள் தேடுவதற்கு இட்டுச் செல்கின்றது. அதன் காரணமாக அவர்கள் தீய சகவாசத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்.
தொழில் மார்க்கமாக தந்தை வெளியே செல்ல வேண்டி இருப்பதால் பிள்ளை களைக் கண்காணிக்கும், பொறுப்பு வீட்டிலிருக்கின்ற தாயையே சாரும்.
“விசுவாசிகளே! நீங்கள் உங்கள் குடும்பத்தினரை (நரக) நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். (அத்தஹ்ரீம்:6)
பிறப்பிலிருந்தே தம் பிள்ளைகளைப் பயிற்றுவிக்குமாறு இஸ்லாம் பெற்றோறைப் பணிக்கிறது. பிள்ளைகளுக்கான கல்வியும் பயிற்சியும் எல்லாத் துறைகளையும் சார்ந்ததாக அமைதல் வேண்டும். இஸ்லாமிய அறிவும் ஈமானிய உணர்வும் ஊட்டப்படவேண்டும். மனிதர்களுக்கு நேர்வழி காண்பிக்க வந்த அல்-குர்ஆன் ‘ஓதுவீராக’ என்றே முழங்குகின்றது.
அல்லாஹ்வின் அறைகூவலின் அடிப் படையில் இஸ்லாம் மார்க்கக் கல்வி, உலக அறிவு என்பனவற்றிக்கு முக்கியத் துவம் கொடுத்துள்ளது. ‘சீனா சென்றே னும் கல்வியைத்தேடு’ என்பது ரஸ¤ல் அவர்களின் அருள் வாக்கு. சிறுவர் நலனில் அக்கறை காட்டும் இஸ்லாம் அவர்களை நல்ல தீன்தாரிகளாக உருவாக்கும் நோக்காக பல வழிகாட்டல் களை அல்-குர்ஆன் பறை சாற்றுகின்றது. அதன்படி பிள்ளைகளை வழிநடத்திச் செல்வது பெற்றோர் கடமையாகும்.
தீனின் அடிப்படையில் அமையப் பெற்ற கல்வி வளர்ந்து வரும் நாளைய சமுதாயத்தினரிடம் நல் வழிமியங்களை வளர்த்துப் பல துறைகளிலும் முன்னேற் றங்கண்டு, சிறந்த உயர்ந்ததொரு மார்க்கச் செல்வாக்குள்ள சமுதாயத்தைக் கட்டி யெழுப்புவதற்கான வாய்ப்பை உருவாக்குகின்றது.
மார்க்கக் கல்வியோடு உலக அறிவுக்கான கல்வியையும் காலாகாலத்தில் பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டியது பெற்றாரின் தலையாய கடமை. பிள்ளைகளின் இயல்பூக்கங்கள், ஆளுமை, திறமைகளைத்துலங்கச் செய்ய கல்வி முக்கிய காரணி. பிற்காலத்தில் சமுதாயத்தின் ஒரு சிறந்த பிரஜையாகத் திகழ கல்வி முக்கிய பங்காற்றுகின்றது.
தந்தை மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புக்களில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்கமுமே.
(அல்-ஹதீஸ் – மிஷ்காத்)
நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயன்படுவ தெல்லாம் அறிவுடைய கல்விமான்கள் தான். (அல்-ஃபாதிர்: 28)
அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? என்று நபியே! நீர் கேளும்! (அஸ்ஸ¤மர்: 9)
உலகக் கல்வி வளர்ச்சிக்குப் பாடசாலைகள், அறிவகங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. மார்க்கக் கல்வியான ஈமானிய இஸ்லாமிய அறிவு வளர்ச்சி க்கு அல்லாஹ்வின் இறை இல்லங்கள், மத்ரஸாக்கள் பெரிதும் பங்காற்றுகின்றன.
அல்லாஹ்வின் அன்பின் அடையாள மான பள்ளிவாசல்களில், ஜமாத்தாக ஐவேளைத் தொழுகை, ஜும்மா, இரு பெருநாட்கள், ரமழானின் சுன்னத்தான தொழுகைகளை, இயன்றவரை, பிள்ளை களை நிறைவேற்றத் தூண்டுவதோடு கலிமா, குர்-ஆன் ஓதுதல், நோன்பு போன்ற அமல்களையும் வாழ்நாளில் கடைப்பிடிக்க ஊக்கப்படுத்த வேண்டியது பெற்றாரின் பொறுப்பும், கடமையுமாகும். இறை இல்லங்கள் மறுமையின் விளை நிலங்கள் என்பதனைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
உங்கள் பிள்ளைகள் ஏழு வதை அடையும் பொழுது தொழுமாறு அவர்களுக்கு ஏவுங்கள். பத்து வயதை அடையும் பொழுது (தொழுகையை) விட்டுவிட்டால் லேசாக அடியுங்கள்.
(அல்-ஹதீஸ், அபூதாவூத்)
நபியே! தொழுகையைக் கொண்டு உம்முடைய குடும்பத்தினரை ஏவுவீராக!

No comments:

Post a Comment

 
Blogger Widgets