சிரிப்பின் ஒழுங்கு.....

சிரிப்பு என்பதும் இறைவனின் அருட்கொடைதான்
وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَى(43)سورة النجم
அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான். 
அல்குர்ஆன் (53 : 43)
மறுமையில் சிரிப்பு என்பது வெற்றியின் அடையாளம்
وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ(38)ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ(39) سورة عبس
அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும் அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள்.
அல்குர்ஆன் (80 : 39)
பிறரைச் சந்திக்கும் போது சிரித்த முகத்துடன் சந்திக்க வேண்டும்
قَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ مَا حَجَبَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا ضَحِكَ رواه مسلم
நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை விட்டு மறைந்து (மறுபடியும்) என்னைக் கண்டால் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல் : முஸ்லிம் (4880)
நபியை சிரிக்க வைக்க ஒருவர்
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَجُلًا عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ اسْمُهُ عَبْدَ اللَّهِ وَكَانَ يُلَقَّبُ حِمَارًا وَكَانَ يُضْحِكُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் கழுதை என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார்.
அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : புகாரி (6780)
அறியாமைக் கால பேச்சை (மூடநம்பிக்கைகளை) பேசி சிரித்துக் கொள்ளலாம்
عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ أَوْ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ رواه مسلم
சிமாக் பின் ஹர்ப் அவர்கள் கூறியதாவது : நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக்காலம் குறித்து பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.
அறிவிப்பவர் : சிமாக் பின் ஹர்ப், நூல் : முஸ்லிம் (1188)
அளவோடு சிரியுங்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُكْثِرُوا الضَّحِكَ فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ رواه إبن ماجه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அதிகமாக சிரிக்காதீர்கள் ஏனென்றால் அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னுமாஜா (4183)
உண்மையைச் சொல்லிதான் சிரிக்க வைக்க வேண்டும்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تُدَاعِبُنَا قَالَ إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில்) மக்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதி (1913)
சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்லக் கூடாது
حَدَّثَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ بِالْحَدِيثِ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ فَيَكْذِبُ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவன் (பிற) கூட்டத்தினரை சிரிக்க வைப்பதற்காக பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்கு கேடு தான். அவனுக்கு கேடு தான்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி), நூல் : திர்மிதி (2237)
பிறரை பயமுறுத்தி சிரிப்பது கூடாது
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ حَدَّثَنَا أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ كَانُوا يَسِيرُونَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ فَنَامَ رَجُلٌ مِنْهُمْ فَانْطَلَقَ بَعْضُهُمْ إِلَى نَبْلٍ مَعَهُ فَأَخَذَهَا فَلَمَّا اسْتَيْقَظَ الرَّجُلُ فَزِعَ فَضَحِكَ الْقَوْمُ فَقَالَ مَا يُضْحِكُكُمْ فَقَالُوا لَا إِلَّا أَنَّا أَخَذْنَا نَبْلَ هَذَا فَفَزِعَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا رواه أحمد
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கிவிட்டார். வேறு சிலர் (உறங்கிக்கொண்டிருந்தவருடன்) இருந்த அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்துவைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இவரது அம்புக்களை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா, நூல் : அஹ்மத் (21986)
அழிவுகள் ஏற்படும் செய்திகள் கிடைத்தால் சிரிக்கக் கூடாது
விபத்துக்கள் அழிவுகள் தொடர்பாக செய்திகள் கிடைத்தால் மரணத்திற்கு பயப்பட வேண்டுமே தவிர சிரித்து கும்மாளம் அடித்துக்கொண்டிருக்கக்கூடாது.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَاحِكًا حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ قَالَتْ وَكَانَ إِذَا رَأَى غَيْمًا أَوْ رِيحًا عُرِفَ فِي وَجْهِهِ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الْغَيْمَ فَرِحُوا رَجَاءَ أَنْ يَكُونَ فِيهِ الْمَطَرُ وَأَرَاكَ إِذَا رَأَيْتَهُ عُرِفَ فِي وَجْهِكَ الْكَرَاهِيَةُ فَقَالَ يَا عَائِشَةُ مَا يُؤْمِنِّي أَنْ يَكُونَ فِيهِ عَذَابٌ عُذِّبَ قَوْمٌ بِالرِّيحِ وَقَدْ رَأَى قَوْمٌ الْعَذَابَ فَقَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا رواه البخاري
மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால் நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும் போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் தாங்கள் மேகத்தை காணும் போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக்காணுகின்றேனே (ஏன்?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆயிஷாவே அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (ஆத் எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்து விட்டு இது நமக்கு மழையை பொழிவிக்கும் மேகம் என்றே கூறினர் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (4829)

No comments:

Post a Comment

 
Blogger Widgets