வருங்காலத் தொழில்நுட்பம் 85 : ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டி
சில வாரங்களுக்கு முன் அமேசான் iCloud Drive
சேவையை வெளியிட்டபோதே, அவர்கள் குளிகைக் கணினியைத் தயாரித்துக்கொண்டு
இருக்கலாம் என்பதை யூகித்தேன். குளிகை தயாரிக்கும் திட்டம் பற்றி வாய்
திறக்காமல் இருந்த அமேசான், இன்னும் சில மாதங்களில் குளிகை வெளி
யிடப்போவதாக அறிவித்து இருக்கிறது. ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டியாக
இருக்கும் என்று பரவலாகப் பேசப் பட்டாலும், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
காரணம்?

கிண்டில்போல மின் படிப்பானாக மட்டுமே இந்தக் குளிகை இருக்காது. கூகுளின்
ஆன்ட்ராய்டில் இயங்கும் இந்தக் குளிகையில் மென்பொருள்களைப்
பதிவேற்றிக்கொள்ளலாம். இது மடிக்கணினிக்கு நிகரானதாக இருக்கும் என்கிறது
அமேசான். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், ஐ-பேடுக்குப் போட்டியாக
இருக்கும்.

'வருங்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பை நீங்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை
அண்டன். எப்போது பார்த்தாலும் சமூக ஊடகம்பற்றித்தான் எழுதுகிறீர்கள்!’
என்று விகடன் டாட்காமில் அக்கறையுடன் கேட்ட பாலசுப்ரமணியும், அவரது
பின்னூட்டத்தை 'Like’ செய்த மற்ற மூன்று வாசகர்களும், அவரது கருத்துக்கு
ஆதரித் தும்/எதிர்த்தும் பின்னூட்டம் இட்ட மற்ற பலரும் சமூக ஊடகத்தின்
வலிமையைப் பயன்படுத்தி இருப்பது நல்ல நகைமுரண். ஒரு கட்டுரைபற்றி அதைப்
படிக்கும் பலருடன் உரையா டலில் ஈடுபடும் 'Engagement’
சமூக ஊடகத்தின் மிக முக்கிய வலிமைகளில் ஒன்று. இது இல்லை என்றால், 'Dear
Editor, In an otherwise well-written article,...’ என்று போஸ்ட் கார்டில்
எழுதி அடுத்த வாரம் அது பிரசுரம்ஆகிறதா என்பதைப் பார்த்துக்கொண்டு இருக்க
வேண்டும்.
அதெல்லாம் சரிதான். ஆனால், சமூக ஊடகத் தொழில்நுட்பம் எதிர்காலத்துக்கு
அத்தனை முக்கியமானதா என்றால், 'நிச்சயமாக யுவர் ஹானர்!’ என்று சொல்வேன்.
உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட
பயனீட்டாளர்கள் இணையத்தில் இயங்குகிறார்கள். அதில் முக்கால்வாசி
ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்பது போன்ற புள்ளிவிவரங்கள் அத்தனை
முக்கியம் இல்லை. காரணம், பொருளாதாரம் பயின்றவர்களுக்கு, 'Law of
diminishing returns’ என்ற விதி நன்றாகத் தெரிந்திருக்கும். முதலீட்டு
எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்குத் தகுந்தபடி விளைவு அதிகரிப்பது இல்லை.
அதற்கு மாறாக, குறையத் தொடங்கும் என்பதுதான் இந்த விதியின் சாராம்சம்.
தெளிவாகத் தெரிந்துகொள்ள, இந்த விதிபற்றிய விக்கி உரலியைச் சொடுக்குங்கள்
http://en.wikipedia.org/wiki/Diminishing_returns. சமூக ஊடகத்தில் அதிக
அளவில் பயனீட்டாளர்கள் இணை யும்போதும், இதே விதியின்விளைவு நிகழும் என்பது
உறுதி.

வீடியோ ஏரியாவில் செலுத்தப்பட்ட முதலீடு YouTube, BrightCode போன்ற
நிறுவனங்களும் அவற்றின் தொழில்நுட்பங்கள் பயனீட்டாளர்களுக்கும், வணிக
நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தது!
No comments:
Post a Comment