தடை செய்யப்பட்ட இணையதளம் மற்றும் வாய்ப்(VoIP) பயன்படுத்தலாம்

தொழில்நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்து வரும் நேரம் அதிலும் கணினி நுட்பங்கள் ஒரு பக்கம் எதிர்பாராத மாற்றங்களை கொண்டுவந்து கொண்டு இருக்கிறது இனி விஷயத்துக்கு செல்வோம் நாம் சாதரணமாக சில நேரங்களில் எதையாவது இனையத்தில் தேடுவோம் ஆனால் அந்த இனையமோ உங்களுக்கு இனைய இனைப்பு வழங்கியிருக்கும் சர்வீஸ் புரைவைடர்களால் ஏதாவது ஒரு காரணத்தினால் தடை செய்யப்பட்டிருக்கும் ஆனால் அதையும் இப்போது சாதரணம் ஒரு கணினி தொழில்நுட்பம் தெரியாதவர்கள் கூட திறந்துவிடும் அளவுக்கு இப்போதைய தொழில்நுட்பம் வழி வகுத்து இருக்கிறது .
இனையத்தில் கண்ட நான்கு விதமான புராக்ஸி மென்பொருள்களை பற்றி இங்கு குறிப்பு தருகிறேன் நீங்களும் இதை செய்தி எனும் அடிப்படையில் இதை தெரிந்துகொள்ளுங்கள் 
Ultra VPN , Hotspot Sheild , Freegate இப்படி இனையத்தில் மென்பொருள்கள் கிடைக்கின்றன , இன்னும் சில வகையான தளங்கள் மென்பொருள் வடிவில் இல்லாமால் நேரடியாக அவர்கள் தளத்தில் இருந்தபடியே தடைசெய்யப் பட்ட தளங்களை திறக்கும் வகையில் செயல்படுகிறது.
என் நண்பர் ஒருவர் ஒரு நாள் உங்கள் தளம் தடை செய்யபட்டிருக்கிறது என்பதாக செய்தி வருவதாக சொன்னார் நம் தளத்திலோ அப்படி தவறான வழியிலான எந்த தகவலும் தளத்தில் இல்லை பின்னர் எப்படி இப்படி ஆயிற்று என ஆராய்ந்து பார்த்தால் சில பதிவுகள் செக்ஸ் தொல்லை பற்றிய சில பதிவுகள் அவர்களால் பில்டர் செய்யப்பட்டிருப்பதை நான் யூகித்து கொண்டேன் அது முதல் பதிவுகள் எழுதும் போது மிக கவணமாக எழுதுகிறேன் ஏதோ ஒரு பதிவில் இருக்கும் ஒரு வார்த்தை நம் மொத்த தளத்தையும் தடை செய்ய காரணமாகி விட கூடாதே.

No comments:

Post a Comment

 
Blogger Widgets